மாதவன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து தமிழில் வெற்றி பெற்ற படம், இறுதிச்சுற்று. சுதா கோங்கரா இயக்கிய படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.
இந்தப் படம் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐஐஎஃப்ஏ விருது (சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி) வழங்கும் விழாவில் அதிக விருதுகளைத் தட்டிச் சென்ற படங்களில் ஒன்றாகக் கெளரவிக்கப்பட்டது. மலையாளத் திரையுலகுக்கான ஐஐஎஃப்ஏ விருதுகளில், சார்லி படம் அதிகபட்சமாக ஏழு விருதுகளைப் பெற்றது.
சிறந்த நடிகை, சிறந்த நடிகர் உள்ளிட்ட 13 விருதுகளில் 3 விருதுகள் இறுதிச்சுற்று படத்துக்குக் கிடைத்தது. இதேபோல நானும் ரெளடிதான் படத்துக்கும் சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த பாடகர், பாடகி என மூன்று விருதுகள் கிடைத்தன. தெறி படமும் சிறந்த இயக்குநர், சிறந்த வில்லன், சிறந்த குழந்தை நட்சத்திரன் என மூன்று விருதுகளைப் பெற்றது. அச்சம் என்பது மடமையடா படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ரஹ்மானுக்குக் கிடைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!

உ.பி.: நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த ரூ.4 லட்ச பணம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

சர்தார் - 2 என்ன ஆனது?
வேட்டுவம் வெளியீடு எப்போது?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


