மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தமிழ்ப் புத்தாண்டன்று வெளியாகும் 3 படங்கள்!

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்துள்ள பவர் பாண்டி, ஆர்யா நடித்துள்ள கடம்பன், லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா...

News image
Updated On :30 மார்ச் 2017, 5:02 pm

இந்த வருட தமிழ்ப் புத்தாண்டுக்கு ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா என பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இருப்பினும் கடுமையான போட்டி ஒன்று நிலவுகிறது.

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்துள்ள பவர் பாண்டி, ஆர்யா நடித்துள்ள கடம்பன், லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா ஆகிய படங்கள் அன்றைய தினம் வெளிவரவுள்ளன. 

வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள பவர் பாண்டி படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு. இப்படத்தின் கதைக்களம், அதிரடி சண்டைக் காட்சி கலைஞர் ஒருவரைப் பற்றிய கதையாகும்.

Story image

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள சிவலிங்கா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் லாரன்ஸ். பி. வாசு இயக்கியுள்ள இப்படத்தில் ரித்திகா சிங், சக்தி வாசு போன்றோரும் நடித்துள்ளார்கள்.

ஆர்யா, கேத்ரீன் தெரசா நடிப்பில் ராகவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம், கடம்பன்.

பாகுபலி 2, ஏப்ரல் 28 அன்று வெளிவருவதால் இந்த மூன்று படங்களும் இரு வாரங்கள் போட்டியின்றி வசூலை அள்ள நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.