பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

விஸ்வரூபம் 2: கமல் புதிய தகவல்!

முதற்கட்டமாக விளம்பரப் பணிகளைத் தொடங்கியுள்ளார் கமல்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:25 pm

DIN

விஸ்வரூபம் 2 படம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக விளம்பரப் பணிகளைத் தொடங்கியுள்ளார் கமல்.

விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தைத் தொடங்கினார் கமல். ஆனால் அந்தப் படத்தின் பணிகள் முழுமையடையாததால் வேறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. 

சில நாள்களுக்கு முன்பு, ட்விட்டரில் இசையமைப்பாளர் ஜிப்ரான், விஸ்வரூபம் 2 பணிகள் தொடங்கியுள்ளதாகக் கூறினார். இப்படத்தின் உதவி இயக்குநரும் இயக்குநருமான ராஜேஷ் கூறும்போது: ஆமாம். விஸ்வரூபம் 2 படப்பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதே குழுவுடன். விஸ்வரூபம் படத்தின் ஹிந்தி, தெலுங்குப் பதிப்புகளுக்கான டப்பிங் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. விஸ்வரூபம் படத்தை விடவும் இது பெரிய படமாக இருக்கும் என்று கூறினார். 

கமல் நடித்து இயக்கி வரும் இந்தப் படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, ராகுல் போஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் விஸ்வரூபம் 2 குறித்து கமல் புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

இன்றிரவு ஏழு மணி, விஸ்வரூபம் 2 - ஹிந்தி, தமிழ், தெலுங்குப் படங்களின் முதல் பார்வை போஸ்டர்கள் பிரத்யேகமாக உங்களுக்காக வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.