டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆயிரம் கோடி வசூலை எட்டிப் பிடித்த பாகுபலி-2!

ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி-2 திரைப்படம் புரிந்துள்ளது.

News image
Updated On :7 மே 2017, 8:14 am

DIN

சென்னை: ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி-2 திரைப்படம் நிகழத்தி சாதனை புரிந்துள்ளது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் உருவான படம் பாகுபலி-2. இந்த படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் இருந்த ஹிந்தி படங்களான தங்கல், சுல்தான் ஆகிய இரண்டு இந்தி படங்களின் 'கலெக்ஷன்' சாதனையை 6 நாட்களில் ரூ.750 கோடியை வசூலித்து இந்திய பட உலகினரை ஆச்சர்யத்தில் வாய் பிளக்க செய்துள்ளது.

தற்பொழுது இந்த படமானது இந்தியாவில் ரூ.800 கோடியும், வெளிநாடுகளில் ரூ.200 கோடியும் வசூல் செய்து உள்ளது. இதன் முதல் பகுதியான பாகுபலி மொத்தமாக ரூ.650 கோடி வசூலித்து இருந்தது. அந்த வசூலை பாகுபலி-2 தாண்டி விட்டது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் இதுவரை சில ஹாலிவுட் படங்கள் மட்டுமே ரூ.1,000 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளன  என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் நிறைய வசூல் சாதனைகளை பாகுபலி நிகழ்த்தும் என எதிர்பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.