நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிரஞ்சீவியின் 151வது படமான ‘உய்யலவாடா நரசிம்ம ரெட்டி’ யில் ராணா டகுபதி!

இந்தப் படம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் சார்பாக பங்கு கொண்ட வீரத் தியாகி ‘உய்யலவாடா நரசிம்ம ரெட்டி’ யின் வாழ்க்கைக் கதையாக இருக்கலாம்

News image
Updated On :10 மே 2017, 11:53 am

சரோஜினி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 150 படம் கைதி நம்பர் 150. இது தமிழில் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் ரீமேக். படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் அள்ளியது. தற்போது சிரஞ்சீவி தனது 151 வது படத்தில் நடிக்கத் தயார். படத்தை தயாரிக்கப் போவது சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தேஜா.

உய்யல வாடா நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி...

Story image

இந்தப் படம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் சார்பாக பங்கு கொண்ட வீரத் தியாகி ‘உய்யலவாடா நரசிம்ம ரெட்டி’ யின் வாழ்க்கைக் கதையாக இருக்கலாம் என படக்குழுவினர் கூறி வருகின்றனர். படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் பாகுபலி புகழ் பல்வாள் தேவன் ‘ராணா டகுபதி’ யும் நடிக்கவிருக்கிறாராம். ராணாவும் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவும் பள்ளிக்கால நண்பர்கள். இருவரும் சென்னை மற்றும் ஹைதராபாத் பள்ளிகளில் இணைந்து படித்தவர்கள். படிக்கும் காலம் தொட்டே இருவருக்கும் நல்ல நட்பு இருந்து வந்தது. அது இப்போதும் தொடர்வதால் சிரஞ்சீவியின் 151 வது திரைப்படமான ‘உய்யலவாடா நரசிம்ம ரெட்டி’ யில் ராணா நடிப்பது உறுதி என்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.