இயக்குநர் அட்லி தயாரித்த படம் ஹிட்!

தமிழகத்தில் 250க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.
இயக்குநர் அட்லி தயாரித்த படம் ஹிட்!
Updated on
1 min read

அறிமுக இயக்குநர் ஐக் இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து கடந்தவாரம் வெளியான படம் - சங்கிலி புங்கிலி கதவ தொற. விஷால் சந்திரசேகர் இசையமைத்த இப்படத்தை இயக்குநர் அட்லி மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். 

சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தமிழகத்தில் 250க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. வார இறுதி நாள்களின் வசூலாக 3 நாளைக்கு ரூ. 6.30 கோடி வசூலித்துள்ளது. இதையடுத்து படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்.

இந்தப் படத்தின் வெற்றி மேலும் பல படங்களுக்கு ஊக்கசக்தியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com