நோ எண்ட்ரி, கோல்மால் ரிடர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி (35), இரண்டாவதுமுறையாக இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகப் போகிறார்.
பீட்டர் ஹாகைத் திருமணம் செய்துகொண்ட செலினா ஜெட்லிக்கு 2012-ம் வருடம் வின்ஸ்டன், விராஜ் என்கிற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் செலினா ஜெட்லிக்கு இம்முறையும் இரட்டைக் குழந்தைகள் பிறக்கவுள்ளன.
துபாயில் உள்ள செலினா இதுகுறித்துப் பேட்டியளித்ததாவது: ஸ்கேன் எடுத்த மருத்துவரிடம், இந்தமுறையும் இரட்டைக் குழந்தைகளா என்று கேட்டார் பீட்டர். அதற்கு ஆம் என்று பதிலளித்தார் மருத்துவர். இதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தோம். அக்டோபரில் குழந்தைகள் பிறக்கவுள்ளன.
இருவருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். எனவே பல குழந்தைகளுக்குப் பெற்றோராக இருக்கக் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்றே எண்ணிக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


