ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அதன் முதல்கட்டமாக ஜெர்மனி தலைநகர் பெர்லினை திங்கள்கிழமை சென்றடைந்தார். இந்தியா - ஜெர்மனி இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான இந்தப் பயணம், இரு நாட்டு நல்லுறவில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கும் என்று ஜெர்மனி சென்றடைவதற்கு முன்னர் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்நிலையில் பெர்லினில் நடிகை பிரியங்கா சோப்ரா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்த பிரியங்கா, பிரதமர் பெர்லினில் இருக்கும்போது நானும் அங்கு வந்திருப்பது தற்செயல். தொடர் பணிகளுக்கு இடையில் என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தந்த பிரதமருக்கு நன்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு தாதாசாகேப் பால்கே விருது விரைவில் வழங்கப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில் அவர் பிரதமரைச் சந்தித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


