மகேஷ் பாபு நடிக்கும் ஸ்பைடர் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ். இதில் ராகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிவருகிறது. இசை, ஹாரிஸ் ஜெயராஜ்; ஒளிப்பதிவு, சந்தோஷ் சிவன்.
இப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து மகேஷ் பாபு ட்விட்டரில் கூறியதாவது: ஸ்பைடர் படம் தசரா வெளியீடாக இருக்கும். டீசர் மே 31-ம் தேதி 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்தார். சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. செப்டம்பர் 29 அதாவது ஆயுத பூஜை அன்று படம் வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வேலைக்காரன் படம் வெளியாகும் அதே தினத்தில் ஸ்பைடரும் வெளிவருவதால் இரு படங்கள் இடையேயும் கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நீண்ட நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தாசரி நாராயணராவ் (75) செவ்வாய்க்கிழமை காலமானார். தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 151 படங்களை இயக்கியுள்ளார். ஆந்திர அரசின் நந்தி விருதையும், இரு முறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
இதையடுத்து இன்று வெளியிடப்படுவதாக இருந்த ஸ்பைடர் டீசர் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாசரி நாராயணராவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும்விதமாக ஸ்பைடர் படத்தின் டீசர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


