தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அதர்வா நடிக்கும் புதிய படம்!

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, இவன் தந்திரன்

News image
Updated On :6 நவம்பர் 2017, 6:00 am

DIN

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, இவன் தந்திரன் ஆகிய படங்களை இயக்கியுள்ள ஆர்.கண்ணனின் அடுத்த படத்தில் கதாநாயகனாக அதர்வா நடிக்கிறார். 

இப்படத்தின் இசையமைப்பாளர் ‘அர்ஜுன் ரெட்டி’ படப் புகழ் ரதன், ஒளிப்பதிவு பிரசன்னா. ஆர்.கண்ணனின்  'மசாலா பிக்ஸ்' நிறுவனமும், எம்.கே.ராம்பிரசாத்தின் எம்.கே.ஆர்.பி நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன. 

Story image

ஆக்‌ஷன் ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்தில் விறுவிறுப்புக்கு குறையிருக்காது, அதர்வா இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறினார் கண்ணன். இப்படத்தின் கதாநாயகி மற்றும் துணை பாத்திரங்களில் தேர்வு விரைவில் தொடங்கவிருக்கிறது.

ஜனவரி மாதம் திருநெல்வேலியில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.