சென்னை: பிரபல இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'நாச்சியார்' பட டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடி ப்பில் உருவாகியிருக்கும் படம் நாச்சியார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
நாச்சியார் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ட்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்பொழுது டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாகத் தோன்றுகிறார்.
டீசர்: