ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

அசோக்குமார் தற்கொலை விவகாரம்: அன்புச்செழியனின் மேலாளர் கைது!

அன்புச்செழியன் தலைமறைவாக இருப்பது தொடர்பான முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில்...

News image
Updated On :29 நவம்பர் 2017, 9:39 am

எழில்

நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் தற்கொலை தொடர்பாக அன்புச்செழியனின் மேலாளரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார், கடந்த 21-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திரைப்பட இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் மைத்துனரான அசோக்குமார், தனது இறப்புக்கு திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். இதுதொடர்பாக வளசரவாக்கம் போலீஸார், அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து 3 தனிப்படைகள் மூலம் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர்.

தலைமறைவாக இருக்கும் அன்புச்செழியனை தீவிரமாக தேடி வரும் நிலையில், அவரது மேலாளர் முருகனை காவல்துறையினர் விசாரணை செய்தார்கள். விசாரணையின் முடிவில் வளசரவாக்கம் காவல்துறையினர் முருகனைக் கைது செய்துள்ளார்கள். 

அன்புச்செழியன் தலைமறைவாக இருப்பது தொடர்பான முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில், போலீஸார் அன்புச்செழியனை விரைவில் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அன்புச்செழியனின் நெருங்கிய நண்பர் சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் முத்துக்குமாரிடம் போலீஸார் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அசோக்குமார் விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. சசிகுமார் நடித்த தாரைதப்பட்டை படத்துக்கு நான் நிதி உதவி செய்தேன். அந்தப் படம் நஷ்டமடைந்தது. நான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டேன். அவர்கள் கொடிவீரன் படத்தின் மூலம் எனது கடனை அடைப்பதாகக் கூறினார்கள். இந்த விவகாரத்தில் வட்டிக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டியதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் என் மீது உண்மைக்குப் புறம்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அசோக்குமாரின் தற்கொலைக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. எனவே, எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும். தேவைப்படும் போது விசாரணை அதிகாரி முன் ஆஜராக உத்தரவாதம் அளிப்பதாக அந்த மனுவில் கோரியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.