கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒரே நாளில் மூன்று மொழிகளில் பாகுபலி 2 தொலைக்காட்சி ஒளிபரப்பு!

படம் திரையரங்குகளில் வெளியானபோது தென்பட்ட பிரமாண்டமும் ரசிகர்களின் ஆர்வமும் அதன் தொலைக்காட்சி ஒளிபரப்புகளிலும்...

News image
Updated On :2 அக்டோபர் 2017, 10:12 am

எழில்

ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2 படம் அக்டோபர் 8 அன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ளது.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. 

ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. இந்தியத் திரையுலகில் வேறெந்தப் படமும் இத்தகைய சாதனையைச் செய்ததில்லை. வெளியான அனைத்து மொழிகளிலும் பல கோடி வசூலை அள்ளியது.

இந்நிலையில் அப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு, தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வருகிற ஞாயிறன்று (அக்டோபர் 8) நிகழ்கிறது.

முதலில் சோனி மேக்ஸ் தொலைக்காட்சியில் மதியம் 1 மணிக்கு பாகுபலி 2 படத்தின் ஹிந்திப் பதிப்பு ஒளிபரப்பாகிறது. அதற்கு முன்பு அதே தொலைக்காட்சியில் காலை 11 மணிக்கு பாகுபலி 1 ஒளிபரப்பாகிறது. அது முடிந்தவுடன் அதன் தொடர்ச்சியாக பாகுபலி 2 ஒளிபரப்பாகிறது. 

தெலுங்கில் பாகுபலி 2 படம், அதே நாளில் மாலை 5 மணிக்கு ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

தமிழில் விஜய் தொலைக்காட்சியில் மதியம் 3 மணிக்கு பாகுபலி 2 ஒளிபரப்பாகிறது. 

இதையடுத்து, ஒரே நாளில் மூன்று மொழிகளில் மூன்று தொலைக்காட்சிகளில் பாகுபலி 2 படம் ஒளிபரப்பாகவுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியானபோது தென்பட்ட பிரமாண்டமும் ரசிகர்களின் ஆர்வமும் அதன் தொலைக்காட்சி ஒளிபரப்புகளிலும் நீடிக்கவுள்ளது.

பாகுபலி 2 படத்தின் மலையாளப் பதிப்பு, ஆகஸ்ட் 27 அன்று ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஏற்கெனவே ஒளிபரப்பாகிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.