
நடிகை அக்ஷரா ஹாசன் தற்போது கமல் ஹாசன் இயக்கி நடிக்கும் 'சபாஷ் நாயுடு' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். அடுத்து பிரபல நடிகருடன் இணையத் தொடர் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். இதற்கு முன் பால்கி இயக்கத்தில் இந்திப் படமான ஷமிதாப்பில் அமிதாப், தனுஷ் ஆகியோருடன் நடித்தார்.

வெப் தொடரில் நடிப்பதைக் குறித்து அக்ஷராஹாசன் கூறியது, 'வெப்சீரிஸ் தற்போது பரவலாகி வருகிறது. ராணா நடிக்கும் 'சோஷியல்' என்ற வெப்சீரிஸில் நடிக்க என்னை கேட்டுள்ளார்கள். இது தொடர்பான பேச்சு நடந்து வருகிறது. இன்னும் நான் ஒப்பந்தமாகவில்லை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடிப்பேன்’ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





