8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானுக்குச் சொந்தமான 28 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக டிரம்ப் பேசியது குறித்து...

We'll hit them hard tonight: US president donald Trump warns of more strikes on Iran

அமெரிக்க விமானம் - ஏபி

Published On :8 ஜூலை 2026, 8:49 pm IST

ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

நேற்று இரவு முதல் ஈரானின் பல்வேறு முக்கியப் பகுதிகளை குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று இரவு கடுமையான தாக்குதல் நடத்துவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியில் நடைபெற்றுவரும் நாட்டோ கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியை சந்திக்கும் முன்பு செய்தியாளர்களுடன் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:

ஈரான் நாட்டுக்குச் சொந்தமான 28 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம். அந்நாட்டு கப்பல்கள் மீதான இந்த தாக்குதல் மேலும் அதிகரிக்கக்கூடும். சிறிய எச்சரிக்கை ஒன்றைக் கொடுக்கிறேன். இன்று இரவு அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்துவோம்.

ஈரான் நாட்டில் 80 இடங்களைக் குறி வைத்துள்ளோம். விமானப் படைத்தளம், துறைமுகம், கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவையும் இதில் அடங்கும் என எச்சரித்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, 14 அம்ச கோரிக்கைகளுடன் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜூலை 7) அறிவித்தார்.

சர்வதேச வணிக போக்குவரத்து நடைபெற்று வரும் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க ஆதரவு நாடுகளின் 3 கப்பல்கள் மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடி கொடுக்கும் விதமாக டிரம்ப் இவ்வாறு பேசி வருகிறார். இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

Summary

We'll hit them hard tonight: US president donald Trump warns of more strikes on Iran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.