ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் முற்றிலும் அவசியமானவை என நேட்டோ அமைப்பின் பொதுச்செயலர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.
ஜோர்முஸ் நீரிணை அருகில் பயணித்த 3 வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து ஈரானின் 80-க்கும் அதிகமான முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்க படைகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) அன்று தாக்குதல் நடத்தியுள்ளன.
ஈரானில் கொல்லப்பட்ட தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்குகள் நடைபெற்று வரும் சூழலில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் வளைகுடா நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், துருக்கியின் அங்காரா நகரத்தில் இன்று நடைபெற்ற நேட்டோ அமைப்பின் 2026 ஆம் ஆண்டுக்கான மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அப்போது, அமெரிக்கா உடனான போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக, நேட்டோ பொதுச்செயலர் மார்க் ரூட்டே குற்றஞ்சாட்டினார்.
இதுபற்றி, அவர் செய்தியார்களுடன் பேசியதாவது:
“இது முற்றிலும் அவசியமானவை என நான் கருதுகிறேன். ஈரான் அடிப்படையில் போர்நிறுத்தத்தை மீறியுள்ளது. நேற்று கப்பல்கள் தாக்கப்பட்டதை நாம் பார்த்தோம். இதற்கு அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்துவது மிகவும் முக்கியமானதாக நான் கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, ஈரான் உடன் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
NATO Secretary General Mark Rutte has stated that the new US attacks on Iran are absolutely necessary.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்!

ஈரானைக் குறிவைத்து 1,000 ஏவுகணைகள் தயாா்! டிரம்ப் எச்சரிக்கை
ஈரான் போரில் ஒத்துழைக்காத ஸ்பெயினுடன் வா்த்தகம் நிறுத்தம்: டிரம்ப்
ஈரானை முழுவதுமாக அழித்தோம்! அமெரிக்காவின் 250வது சுதந்திர நாள் விழாவில் டிரம்ப் பேச்சு!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



