கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி இராக் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப்.28 அன்று நடத்திய தாக்குதல்களில் ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே வெடித்த போரால் கமேனியின் இறுதிச்சடங்குகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கமேனியின் இறுதிச்சடங்குகள் கடந்த ஜூலை 4 அன்று தொடங்கின. மேலும், இந்தியா, பாகிஸ்தான், சீனா, சௌதி அரேபியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கமேனியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், ஈரானின் மஷாத் நகரத்தில் கமேனியின் உடல் நாளை அடக்கம் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் புனித நகரங்களில் ஒன்றான இராக்கின் நஜாஃபிற்கு கமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி இன்று (ஜூலை 8) கொண்டு செல்லப்பட்டது.
அங்கு லட்சக்கணக்கான மக்கள் கமேனிக்குத் தங்களின் இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர். மேலும், இராக்கில் நடைபெற்ற கமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஈரானின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கலந்துகொண்டார்.
ஆனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர்நிறுத்தம் ரத்து செய்யப்பட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்கா மீண்டும் தாக்குதலைத் தொடங்கியதால் அதிபர் பெஷேஷ்கியன் உடனே தாயகம் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
the coffin containing the body of the slain Iranian supreme religious leader, Ayatollah Ali Khamenei, has arrived in Iraq.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானில் கமேனி இறுதிச் சடங்கில் வைக்கப்பட்டிருந்த சிறிய சவப்பெட்டி!

கமேனியின் இறுதிச் சடங்கிற்காக ஈரானுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கியுள்ளோம்! - டிரம்ப் பேச்சு!

ஈரான் முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி காமெனி இறுதிச் சடங்கு தொடக்கம்

கமேனியின் இறுதிச் சடங்கிற்குப் பிறகே அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சு!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK




