கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கிற்கான நிகழ்வுகள் தொடங்கியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று நடத்திய கூட்டுத் தாக்குதலில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானின் தலைமை மதகுருவாகப் பதவி வகித்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே வெடித்த போரானது தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து கமேனியின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில், தலைநகர் தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா எனப்படும் மிகப் பெரிய மசூதிக்கு சவப்பெட்டியில் வைக்கப்பட்டு கமேனியின் உடல் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) காலை கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, கமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியின் மீது ஈரானின் தேசிய கொடி போர்த்தப்பட்டுள்ளதும், கருப்பு நிற உடை அணிந்த லட்சக்கணக்கான மக்கள் கமேனிக்கு அஞ்சலி செலுத்த அங்குத் திரண்டுள்ளதும் வெளியான புகைப்படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
இத்துடன், நாளை நடைபெறவுள்ள அதிகாரப்பூர்வ இறுதிச்சடங்கு நிகழ்வுகளில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
இதையடுத்து, தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கமேனியின் உடல் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு வரும் ஜூலை 9 ஆம் தேதி மஷாத் நகரத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Events for the funeral of the slain Iranian supreme religious leader Ayatollah Ali Khamenei have begun.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தந்தையின் இறுதிச்சடங்கில் மோஜ்தபா கமேனி பங்கேற்கமாட்டார்! ஈரானிய பிரதிநிதி தகவல்!

கமேனியின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு!

கமேனியின் இறுதிச் சடங்கிற்குப் பிறகே அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சு!

ஈரானிய தலைமை மதகுரு கமேனிக்கு ஜூலை 9 இறுதிச் சடங்கு!
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK



