தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

ஈரானில் அயதுல்லா அலி கமேனி இறுதி ஊர்வலம் தொடக்கம்! மோஜ்தபா கமேனி எங்கே?

ஈரானில் அயதுல்லா அலி கமேனி இறுதி ஊர்வலம் தொடங்கியது பற்றி...

News image

ஈரானில் அயதுல்லா அலி கமேனி இறுதி ஊர்வலம் தொடக்கம் - AP

Updated On :6 ஜூலை 2026, 1:49 pm IST

ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து கொல்லப்பட்ட அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலம் திங்கள்கிழமை காலை தொடங்கியது.

ஆனால், அவரது மகனும், ஈரானின் தற்போதைய தலைமை மதகுருவுமான மோஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் வரவில்லை.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப்.28 அன்று நடத்திய கூட்டுத் தாக்குதலில், ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே வெடித்த போரானது தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொல்லப்பட்ட தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கான இறுதிச்சடங்கு நிகழ்வுகள் சனிக்கிழமை தொடங்கின. தெஹ்ரானில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு உலகத் தலைவர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

வருகின்ற ஜூலை 9 ஆம் தேதி, ஈரானின் மஷாத் நகரத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

'கிராண்ட் மொசல்லா' மத வழிபாட்டு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அயதுல்லா அலி கமேனியின் ஆதரவாளர்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.

அயதுல்லா அலி கமேனியின் மகன்களான மசூத் கமேனி, மெய்சம் கமேனி மற்றும் மொஸ்தஃபா கமேனி ஆகியோர் இந்த தொழுகையில் கலந்துகொண்டனர். ஆனால், அவரின் வாரிசாக கருதப்படும் மோஜ்தபா கமேனி மட்டும் கலந்துகொள்ளவில்லை.

அயதுல்லா அலி கமேனியின் மகன்கள் மசூத் கமேனி, மெய்சம் கமேனி மற்றும் மொஸ்தஃபா கமேனி

அயதுல்லா அலி கமேனியின் மகன்கள் மசூத் கமேனி, மெய்சம் கமேனி மற்றும் மொஸ்தஃபா கமேனி - AP

இறுதிச் சடங்கில் கலந்து கொள்வாரா?

பிப்ரவரி 28 தாக்குதலில் பலத்த காயமடைந்த மோஜ்தபா கமேனி தலைமறைவாகவுள்ளார். இதுவரை அவர் பொதுவெளியில் வராத நிலையில், அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள மோஜ்தபா கமேனி விருப்பம் தெரிவித்தபோதும், அவரின் பாதுகாப்பு கருதி ஈரான் புரட்சிகரப் படை அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது தெஹ்ரானில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டுள்ள நிலையில், 3 நாள்கள் ஊர்வலத்துக்குப் பிறகு, ஜூலை 9 ஆம் தேதி மஷாத் நகரத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்த அடக்க நிகழ்விலும் மோஜ்தபா கமேனி பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

அவர் இறுதிச் சடங்கில் பங்கேற்றால் இஸ்ரேல் படைகள் அவரைக் கொல்ல முயற்சிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் நடமாட்டத்தை கொண்டு அவரின் இருப்பிடம் கண்டறியப்படும் என்ற அச்சத்தின் காரணமாக ஈரான் படைகள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story image

AP

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் அவரது மூத்த மகனைத் தவிர மற்ற மூன்று மகன்களான மசூத், மெய்சாம் மற்றும் மொஸ்தஃபா, ஈரானிய புரட்சிகர படைத் தலைவர் ஜெனரல் அஹ்மத் வஹிடி, அதிபர் பெசெஷ்கியன், நாடாளுமன்ற தலைவர் முகமது பாகர் காலிபாஃப் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Summary

Funeral procession for Ayatollah Ali Khamenei begins in Iran! Where is Mojtaba Khamenei?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.