பாலா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்! இசையமைப்பாளர் யார்?
இளையராஜாவா யுவன் சங்கர் ராஜாவா? இதுகுறித்த தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று...


பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அர்ஜூன் ரெட்டி என்கிற மற்றொரு தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கியுள்ள படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது.
இந்நிலையில் இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. கதாநாயகனாக நடிக்க நடிகர் விக்ரமின் மகன் துருவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துருவ் திரையுலகில் அறிமுகமாகும் படம் இது.
இந்தப் படத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவனின் பெயர் முதலில் அடிபட்டது. பிறகு பாலாவின் பெயரும் செய்திகளில் வலம்வந்தது. இந்நிலையில் அர்ஜூன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கை பாலா இயக்கவுள்ளதாக நடிகர் விக்ரம், சமூகவலைத்தளத்தில் அறிவித்துள்ளார். மலையாளப் படத் தயாரிப்பாளரான ஈ4 எண்டர்டெயிண்மெண்டைச் சேர்ந்த முகேஷ் மேத்தா இப்படத்தைத் தயாரிக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா நியமிக்கப்படுவார் என்று அறியப்படுகிறது. பாலாவின் பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார். நந்தா, அவன் இவன் ஆகிய படங்களுக்கு மட்டும் யுவன் சங்கர் ராஜாவும் பரதேசி படத்துக்கு ஜிவி பிரகாஷும் இசையமைத்தார்கள்.
இந்நிலையில் அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக் படத்துக்கு யுவன் இசையமைப்பார் என்றும் இதுகுறித்த தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இளையராஜா ரசிகர்கள், அர்ஜூன் ரெட்டி போன்ற ஒரு காதல் படத்துக்கு ராஜாவின் இசை இன்னும் பொருத்தமாக இருக்கும். எனவே பாலா தனது ஆஸ்தான இசையமைப்பாளரையே இந்தப் படத்திலும் பயன்படுத்துவார் என்று ஆவலாக உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...