சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்தித் திரைப்படம் ஒன்றில் இடம்பெறப் போகும் நடிகர் விஜயின் 'பைரவா' படப்பாடல்!

விரைவில் வெளிவரவுள்ள பிரபல  இந்தித் திரைப்படம் ஒன்றில் நடிகர் விஜயின் 'பைரவா' படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று தமிழிலேயே இடம்பெற உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2017, 12:18 pm

DIN

சென்னை: விரைவில் வெளிவரவுள்ள பிரபல  இந்தித் திரைப்படம் ஒன்றில் நடிகர் விஜயின் 'பைரவா' படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று தமிழிலேயே இடம்பெற உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கத்தில் உருவாகி இவ்வாண்டு துவக்கத்தில் வெளியான  படம் பைரவா. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற அருண்ராஜா காமராஜ் எழுதிய 'வரலாம் வா' என்னும் பாடல் மிகவும் புகழ்பெற்றதாகும்.

தற்பொழுது ஹிந்தியில் பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோல்மால் அகைன்’. கோல்மால் படங்களின் வரிசையில் இது நான்காவது படமாகும். இந்த படத்தில் அஜய் தேவ்கான், ப்ரணீதா சோப்ரா, தபு, அர்சாத் வர்சி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ் படங்களில் அறியப்பட்ட இசையமைப்பாளரான தமன்  இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். இப்படம் அக்டோபர் 20-ம் தேதி வெளியாகிறது.

தற்பொழுது இந்த படத்தில் ‘பைரவா’வில் இடம்பெற்ற ‘வரலாம் வா’ என்ற பாடல் தமிழிலேயே இடம்பெற உள்ள தகவல் வெளியாகியுள்ளது. பாடலை முறையாக அனுமதி வாங்கி அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்

இது குறித்து பைரவா இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது டிவிட்டர் பக்கத்தில் "வரலாம் வரலாம் வா பாடலைத் தமிழில் பயன்படுத்தியதற்கு ரோஹித் ஷெட்டி, விஜய், அருண்ராஜ் காமராஜ் மற்றும் குழுவினருக்கு இத்தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.