டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

எச்.ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்: மெர்சல் 'பன்ச்' வைத்த நடிகர் பார்த்திபன்!

மெர்சல் திரைப்பட சர்ச்சை விவகாரம் தொடர்பாக 'மரியாதைக்குரிய எச்.ராஜாவுக்குரிய மரியாதையை குறைக்க வேண்டும்' என்று இயக்குனர், நடிகர் பார்த்திபன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:56 pm

DIN

சென்னை: மெர்சல் திரைப்பட சர்ச்சை விவகாரம் தொடர்பாக 'மரியாதைக்குரிய எச்.ராஜாவுக்குரிய மரியாதையை குறைக்க வேண்டும்' என்று இயக்குனர், நடிகர் பார்த்திபன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இதில் ஜிஎஸ்டி தொடர்பாக இடம்பெற்றுள்ள வசனங்கள்  பாஜக கட்சித் தலைவர்களுக்கு கடும் ஆத்திரத்தினை கிளப்பியுள்ளது. தமிழிசை, ஹெச்.ராஜா உள்ளிட்டோர் தொடர்ந்து மெர்சலுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் தற்பொழுது பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜகவின் தேசிய செயலரான எச்.ராஜா, '’மெர்சல் காட்சிகளை இணையத்தில் பார்த்தேன்" என்று பேசினார். இதனால், திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்தார்கள்.

எச்.ராஜாவின் இந்த அடாவடி பேச்சு குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று கூறியிருப்பதாவது:

கட்சிக்காரர்களின் நெரிசல் காரணமாக மெர்சல் காணவில்லை. முட்டி மோ(டி)தி பார்க்க வைத்து விடுவார்களோ?. வெற்றிக்கு நன்றி சொல்ல டெல்லி விஜய்யம்!

மரியாதைக்குரிய எச்.ராஜாவுக்குரிய மரியாதையை குறைக்க வேண்டும். அவர் களவாடி(யாய்) மெர்சல் கண்டிருந்தால்..! நான் எல்லோருக்கும் நண்பன்! ஆனால் சினிமாவை திருடி பிழைப்பவர்களுக்கும், அதில் கண்டு கழிப்பவர்களுக்கும் மூர்க்க எதிரி!

இவ்வாறு பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.