மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாமி 2 படத்திலிருந்து த்ரிஷா விலகல்!

சாமி 2 படத்திலிருந்து விலகியுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்...

News image
Updated On :23 அக்டோபர் 2017, 12:24 pm

கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் சாமி. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து சாமி 2 படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலைச் சமீபத்தில் வெளியிட்டார் இயக்குநர் ஹரி. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக த்ரிஷாவுடன், கீர்த்தி சுரேஷும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பாபி சிம்ஹா. பிரபு, சூரி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - தேவி ஸ்ரீ பிரசாத். சாமி 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. 

இந்நிலையில் சாமி 2 படத்திலிருந்து விலகியுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். கருத்துவேறுபாடுகளால் விலகியுள்ளதாகவும் சாமி 2 படக்குழுவினருக்குத் தன் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.