இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நம்பர் ஒன் நகைச்சுவை நடிகரின் புகழ் சிறிது, சிறிதாக அஸ்தமிக்கிறதா?

கபில் ஷர்மாவின் காமெடி நைட் ஷோவுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. தனது ஷோக்களில் நண்பரும் உடன் நடிப்பவருமான சுனில் குரோவருடன் இணைந்து அட்டகாசமாக ஸ்டேண்ட் அப் காமெடி செய்து பலத்த கை தட்டல் பெறுவது
இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நம்பர் ஒன் நகைச்சுவை நடிகரின் புகழ் சிறிது, சிறிதாக அஸ்தமிக்கிறதா?

கோலிவுட்டில் ஒரு சமயத்தில் நமது வைகைப்புயலுக்கும். அவரது ஆஸ்தான நகைச்சுவைக் குழுவில் பிரதானமானவராக இருந்த சிங்கமுத்துவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வசைபாடிக் கொண்டார்கள். கிட்டத்தட்ட அது போலத்தான்... பாலிவுட் புகழ், ஸ்டார் நகைச்சுவையாளர் கபில் ஷர்மாவுக்கும் அவரது நண்பரும் நகைச்சுவையாளருமான சுனில் குரோவருக்குமிடையிலான பனிப்போர். கபில் ஷர்மாவைப் பொருத்தவரை இந்தியாவில் ஹீரோக்களை விடவும் அதிகம் சம்பளம் பெறும் தகுதி கொண்ட ஒரு நகைச்சுவையாளராக அறியப்படுபவர். நம்மூர் ரியாலிட்டி ஷோக்களினிடையே திரைப்படங்களின் புரமோஷன் ஷோக்களை வைத்து விளம்பரப்படுத்துவார்களே அதற்கான அச்சாரம் போட்டது கபில் ஷர்மாவின் ‘காமெடி நைட்ஸ் வித் கபில் ஷர்மா’ ஷோ தான்.

கபில் ஷர்மாவின் காமெடி நைட் ஷோவுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. தனது ஷோக்களில் நண்பரும் உடன் நடிப்பவருமான சுனில் குரோவருடன் இணைந்து அட்டகாசமாக ஸ்டேண்ட் அப் காமெடி செய்து பலத்த கை தட்டல் பெறுவது கபிலின் வழக்கம். நாட்கள் இப்படியே சென்று கொண்டிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால், தொடங்கிய எல்லாமே ஒரு சமயத்தில் மெல்ல, மெல்ல ஒரு முடிவுக்கு வரும் என்ற விதிக்கு ஏற்ப, ஒருமுறை தனது காமெடி ஷோ ஒன்றுக்காக ஆஸ்திரேலியா சென்று திரும்பிக் கொண்டிருந்த கபில் ஷர்மா, மிகுந்த மன அழுத்தத்தில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கையில் சுனிலுடன் தனக்கேற்பட்ட ஏதோ ஒரு சின்ன சண்டையில் தன் ஷூவைக் கழட்டி சுனில் மேல் விட்டெறிந்திருக்கிறார்’ என்ன தான் பிரபல நகைச்சுவையாளராக இருந்தாலும், தன்னைப் போலவே வளர்ந்து வரும் சக நகைச்சுவை நடிகரை ஷூவால் அடித்தால் உடன் பயணித்தவர்கள் சும்மா இருப்பார்களா? உடனே கபிலைப் பற்றி வரிந்து கட்டிக் கொண்டு கண்டித்து எழுத ஆரம்பித்தார்கள். இந்தியாவின் காமெடி கிங் என்ற நிலையில் இருந்து குப்புறக் கவிழ்ந்து கொண்டிருக்கிறது கபிலின் இமேஜ்.

அது மட்டுமல்ல பெரிய நடிகர்கள் தங்களது திரைப்படங்களின் புரமோஷனுக்காக ‘காமெடி நைட்ஸ் வித் கபில் ஷோவை’ அணுகினால்... கபிலிடம் இருந்து இப்போதெல்லாம் சரியாக ரெஸ்பாண்ட்ஸ் கிடைப்பதில்லையாம். கபில் ஒழுங்காக ஷூட்டிங் வருவதில்லை. மக்களது பெருத்த ஆதரவில் வளர்ந்து பிரபலமான ஷோ இது என்ற எண்ணம் துளியும் இன்றி வேலையில் ஆர்வமற்று, பொறுப்பே இல்லாமல் சதா எல்லா நேரமும் குடித்தே நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார் கபில். என்றெல்லாம் வட இந்திய ஊடகங்கள் எழுதுகின்றன. இதில் எது நிஜம்? என்ற கேள்விக்கு கபிலே பதில் சொல்லி இருக்கிறார்.

‘ஆம், அன்று நான் சுனிலை நோக்கி என் ஷூவை விட்டெறிந்தது உண்மை தான். அவர், என்னைப் பார்த்து ‘ஏன் இப்படி பிஹேவ் செய்கிறாய்? என்று கேட்டார். எனக்கிருந்த மன அழுத்தத்தில், என் நண்பன் தானே என்று முன்னுரிமை எடுத்துக் கொண்டு அப்படிச் செய்து விட்டேன். ஆனால் மக்கள் ஏன் அப்படி நினைக்கவில்லை என்று தான் எனக்குப் புரியவில்லை. இந்தச் சம்பவத்தை இரு நண்பர்களுக்கிடையில் நடந்ததாக நினைத்து மன்னித்து விட்டு விட அவர்கள் தயாராக இல்லை. மேலும், மேலும் அதைப் பற்றிப் பேசி, என்னை விமர்சித்து இதைப் பெரிய பகையாக மாற்றி விட்டார்கள். நான், இப்போதும் சுனிலை மிகவும் நேசிக்கிறேன். ஆனால், நாம் யாரை நம்புகிறோமோ, யாரை மிகுதியாக நேசிக்கிறோமோ அவர்களால் தான் நமக்கு பெரிய அளவில் துன்பம் வந்து சேர்கிறது.

ஆம், அதனால் நான் இப்போது கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன் என்பது நிஜமே! என் நண்பர்களில் ஒருவன், என்னை சில நாட்கள் அவனது கடற்கரையோர கெஸ்ட் ஹவுஸில் வந்து தங்கச் சொல்லு வற்புறுத்திக் கொண்டே இருந்தான்... எனக்கென்ன பயம் என்றால், எனக்கிருக்கும் மன உளைச்சலில் அவனது வீட்டு பால்கனியிலிருந்து வெகு அருகில் விரிந்து பரவும் கடலில் குதித்துச் செத்து விடுவேனோ என்று தோன்றியதால், அவனது வேண்டுகோளை நான் நிராகரித்து விட்டேன். நாள் முழுக்க என் நாயுடன், என் அறையைப் பூட்டிக் கொண்டு நான் குடித்துக் குடித்தே நாளைக் கழிக்கிறேன் என்கிறார்கள். ஆம் இந்த துக்கத்தை வேறு எப்படிக் கடப்பது? என்று தெரியாததால் தான் நான் அப்படி இருக்கிறேன்’

- என்றிருக்கிறார்.

திரையுலகைப் பொறுத்தவரை நீண்ட நாள் நாண்பர்களும் கூட ஒரு சிறு கருத்து வேற்றுமை அல்லது ஈகோ பிரச்னையில் ஜென்ம எதிரிகளாகி விடுவது வாடிக்கை தான். அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ஆனால் அந்த உதாரணங்கள் அனைத்துமே சம்மந்தப்பட்டவர்களைப் பொறுத்தவரை அவர்களது அடையாளத்தை, புகழை, வருமானம் தரக்கூடிய தொழிலை, எதிர்கால வளமான வாழ்வை எனப் பலவற்றையும் நசித்துப் போகச் செய்துள்ளது. கபில் ஷர்மாவின் வாழ்வும் அந்த வகையில் ஷீணித்துப் போகக் கூடாது என அவரது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கபில் ஷர்மா தனது சோதனைக் காலத்தை வெற்றிகரமாகக் கடந்து பழைய கபில் ஷர்மாவாக மீள்வாரா?! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com