பிரபல நடிகை அசினுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.
மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவும் (37) நடிகை அசினும் (30) கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். இதனையடுத்து கடந்த வருடம் ஜனவரி 19-ம் தேதி அன்று இருவருக்கும் தில்லியில் கிறிஸ்தவ மற்றும் ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. பிறகு, படங்களில் நடிக்கப்போவதில்லை என்று ஓர் அறிக்கையில் அசின் தெரிவித்தார்.
இந்நிலையில் அசினுக்கு மகள் பிறந்திருப்பதாக ராகுல் சர்மா ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். எங்கள் இருவருக்கும் கடந்த 9 மாதங்களும் சிறப்பான தருணங்கள் ஆகும். எங்கள் மீது அன்பு செலுத்திய அனைவரும் நன்றி என்று அவர் கூறியுள்ளார்.
நடிகர் அக்ஷய் குமார், மருத்துவமனைக்கு நேரில் சென்று அசின் - ராகுல் சர்மா தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு எடுத்த புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



