திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

டோலிவுட்டில் துல்கர் சல்மானுக்கு கிட்டிய ‘ஹாட்ரிக்’ வெற்றி வாய்ப்புகள்!

துல்கர் நடிப்பில் பரவலாக கவனம் பெற்ற வெற்றித் திரைப்படமான ‘ஜோமோண்டே சுவிசேஷங்கள்’ தெலுங்கில் 'அந்தமைன ஜீவிதம்' என்ற பெயரில் வெளியாகவிருக்கிறதாம்.

News image
Updated On :24 அக்டோபர் 2017, 2:54 pm IST

இந்த வருடத்தின் துவக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்து சக்கைப் போடு போட்ட திரைப்படம் ‘ஜோமோண்டே சுவிசேஷங்கள்’ இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருக்க ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமா பரமேஸ்வரன் என இரு நாயகிகள். வருடத்துவக்கத்தில் 45 கோடி ரூபாய் கலெக்‌ஷனை அள்ளிக் கொடுத்த இத்திரைப்படத்தின் இயக்குனர் சத்தியன் அந்திக்காடு. டோலிவுட்டைப் பொருத்தவரை மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’  தெலுங்கில் ஓக்கே பங்காரம்’ ஆக டப் செய்யப்பட்ட வகையில் துல்கருக்கு கணிசமான அளவில் அங்கும் ரசிகர்கூட்டம் உண்டென்பதை இப்போது குறிப்பிட்டாக வேண்டும்.

அப்படத்தின் வாயிலாக டோலிவுட்டில் அடியெடுத்து வைத்த துல்கருக்கு அடுத்துக் கிடைத்த பெரிய வாய்ப்பு என்றால் அது நடிகை சாவித்ரியின் வாழ்க்கைச் சித்திரமான ‘மகாநதி’ யில் நாயகனான கதையைத் தான் சொல்ல வேண்டும். அத்திரைப்படத்தில் நடிகர் ஜெமினி கணேஷனின் வேடமேற்று நடித்துக் கொண்டிருப்பது துல்கர் தான். முதலிரண்டு வெற்றி வாய்ப்புகளைத் தொடர்ந்து மூன்றாவதாக தற்போது துல்கர் நடிப்பில் பரவலாக கவனம் பெற்ற வெற்றித் திரைப்படமான ‘ஜோமோண்டே சுவிசேஷங்கள்’ தெலுங்கில் 'அந்தமைன ஜீவிதம்' என்ற பெயரில் வெளியாகவிருக்கிறதாம்.  அந்தமைன ஜீவிதம் என்றால் தெலுங்கில் ‘அழகான வாழ்க்கை’ என்று பொருள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.