திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பிரபாஸ் பிறந்தநாள்: நடிகை அனுஷ்கா வாழ்த்து!

நடிகை அனுஷ்கா, ஃபேஸ்புக் வழியாக பிரபாஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்...

News image
Updated On :23 அக்டோபர் 2017, 3:51 pm IST

நடிகர் பிரபாஸுக்கு இன்று பிறந்தநாள்.

இந்நிலையில், நடிகை அனுஷ்கா, ஃபேஸ்புக் வழியாக பிரபாஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 

அன்பான மனிதரும் என் அருமை நண்பருமான பிரபாஸுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்வில் எல்லா வளமும் மகிழ்ச்சியும் நல்ல உடல்நலமும் பெற்று வாழ வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

2009-ல் வெளிவந்த பில்லா படத்தில் பிரபாஸ் - அனுஷ்கா முதல்முறையாக ஜோடியாக நடித்தார்கள். பிறகு இந்த இணை மிர்ச்சி படத்திலும் தொடர்ந்தது. பாகுபலி படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்து இருவரைப் பற்றிய கிசுகிசுகள் அதிகமாக வர ஆரம்பித்துவிட்டன. பிரபாஸ் - அனுஷ்கா குறித்த கிசுகிசு சமீபத்தில் திருமணத் தேதி வரைக்கும் சென்றுவிட்டது. 

இதற்கு மேல் சென்றால் எல்லையைத் தாண்டிவிடும் என்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தன் கருத்தை வெளிப்படுத்தினார் பிரபாஸ். 

Story image


ஒரு பேட்டியில் இவ்வாறு கூறினார்: 

நாங்கள் இருவரும் கடந்த 9 ஆண்டுகளாகக் குடும்ப நண்பர்களாக உள்ளோம். நாங்கள் நல்ல நண்பர்கள். பலவருடங்களாக ஒருவரையொருவர் அறிந்துள்ளோம். ஆனால் எப்போதெல்லாம் எங்களைப் பற்றிய ஊகங்கள் வெளிவருகிறதோ அப்போதெல்லாம் எங்கள் இருவருக்கும் இடையில் வேறு ஏதாவது உள்ளதா என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. 

உண்மையில், எங்கள் இருவருக்கிடையில் அப்படியெதுவும் இல்லை என இருவருக்குமே தெரியும். ஆரம்பத்தில் இதுபோன்ற செய்திகளால் நான் கவலையடைந்துள்ளேன். இப்போது பழகிவிட்டது. இது ஒன்றும் புதிதல்ல. எந்த ஒரு ஜோடியும் ஒரு படத்துக்கு மேல் ஒன்றாகப் பணியாற்றினால் இதுபோன்ற கிசுகிசுக்கள் வருவது சகஜம் என்றார். இந்நிலையில் அனுஷ்கா, பிரபாஸுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.