மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குநர் இவர்தான்!

அஜித் என்றால் மாஸ் தான். தல என்று ரசிகர்கள் போற்றி மகிழும் அஜித்துக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டம் உண்டு.

News image
Updated On :29 அக்டோபர் 2017, 10:20 am

DIN

அஜித் என்றால் மாஸ் தான். தல என்று ரசிகர்கள் போற்றி மகிழும் அஜித்துக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டம் உண்டு. அஜித் படங்களுக்கு அவர்களிடம் எப்போதும் எதிர்ப்பார்ப்பு அதிகளவு இருக்கும்.

இந்நிலையில் அஜித் சமீபத்தில் நடித்த விவேகம் வசூலில் சாதனை செய்திருந்தாலும், சமூக வலைத்தளங்களில் கடும் விமரிசனத்துக்கு உள்ளானது. மேலும் அஜித் தொடர்ந்து சிவா படங்களில் மட்டுமே நடித்து வருவது ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது.

விவேகத்துக்குப் பிறகு அஜித் இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிப்பார் என்றும் விஷ்ணுவர்த்தன் அவரை அணுகினார் என்றும் செய்திகள் வெளிவந்தன. புஷ்கர் காயத்ரியை சந்தித்தார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அஜித் 58 படத்தையும் சிவாதான் இயக்கவிருக்கிறார் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. 

இப்படம் ‘வீரம் 2’வாக இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் ஃபேமிலி ட்ராமா ஜானரில் அஜித் சிவாவிடம் கதை எழுதச் சொல்லியிருந்ததால் அதற்கேற்ற படி சிவா கதையை உருவாக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலிருந்து மாறி இளமையான தோற்றத்தில் காட்சியளிப்பார் என்கிறது சிவா தரப்பு.  சிவா அஜித் கூட்டணியில் வி பட டைட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்படத்தின் பெயர் இன்னும் முடிவாகாத நிலையில் படத்தின் பிற நடிகர்களும், டெக்னிஷியன்கள் தேர்வும் நடந்த பின்னரே தலைப்பு முடிவாகுமாம்.

அஜித்தின் ரசிகர்களுக்கு இச்செய்தி அதிருப்தியாக இருந்தாலும், அவர்கள் தல 58 படத்தை அதே உற்சாகத்துடன் வரவேற்பார்கள் என்பது உறுதி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.