பிக் பாஸ் புகழ் ஹரிஷ் - ரைஸா ஜோடியாக நடிக்கும் படம்!
பிக் பாஸில் பங்குபெற்ற ஹரிஷ், ரைஸா ஆகிய இருவரும் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்கள்...


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் கிடைத்து வருகின்றன.
அதன் அடிப்படையில் பிக் பாஸில் பங்குபெற்ற ஹரிஷ், ரைஸா ஆகிய இருவரும் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்கள். இத்தகவலை ஹரிஷ், ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கிரகணம் படத்தை இயக்கிய இலன் இப்படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
யுவனின் இசையைக் கேட்டு வளர்ந்தவன். அவருடைய இசையமைப்பில் நடிக்கவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். என் கனவு நிஜமாகியுள்ளது. ரைஸாவுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
நவம்பர் 5 அன்று இப்படத்தின் முதல் தோற்றம் போஸ்டர் வெளியாகும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...