6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் விவகாரம்: காலம் பதில் சொல்லும் என ராகவா லாரன்ஸ் பேட்டி!

நீட் தேர்வால் அனிதா உயிரிழந்தது போன்ற ஒரு சம்பவம் இனி நடைபெறக் கூடாது... 

News image
Updated On :11 செப்டம்பர் 2017, 10:03 am

எழில்

திருப்பதி ஏழுமலையானை நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் வழிபட்டார்.

பிறகு, அவர் செய்தியாளர்களிடம் நீட் விவகாரம் குறித்துக் கூறியதாவது:

நீட் தேர்வால் அனிதா உயிரிழந்தது போன்ற ஒரு சம்பவம் இனி நடைபெறக்கூடாது. நீட் விவகாரம் தொடர்பாக காலம் பதில் சொல்லும் என்று கூறினார். 

கடந்த ஜனவரி மாதம், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடைபெற்றபோது இளைஞர்களுக்கு நிறைய உதவிகள் செய்தார் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் நீட் விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்நிலையில் நீட் குறித்த தனது கருத்துகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.