6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோனியா யார் அவர்? நடிகை ராய் லட்சுமி கேள்வி!

நான் தோனியை டேட்டிங் செய்தேனா இல்லையா என்பது இங்கு முக்கியமில்லை. ஆனால் மக்கள் நான் அவரைத் திருமணம் செய்யப்போவதாக... 

News image
Updated On :19 செப்டம்பர் 2017, 7:09 am

எழில்

தமிழ் நடிகை ராய் லட்சுமி ஹிந்தியில் நடித்த ஜூலி 2 படம்  அக்டோபர் 6 அன்று வெளிவரவுள்ளது. ஜூலி 2 படம் தொடர்பாக ஆங்கில இதழுக்குப் பேட்டியளித்துள்ள ராய் லட்சுமி தோனியுடனான காதல் குறித்து கூறியதாவது:

தோனி குறித்து கேள்வி கேட்கிறீர்கள். யார் அவர்? தோனி குறித்த கேள்விகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். அது நடந்து நாளாகிவிட்டது. அவர் தற்போது திருமணமாகி மகிழ்ச்சியாக உள்ளார். அவருக்குக் குழந்தை உண்டு. எல்லோருக்கும் எல்லோரையும் பற்றி இன்றைய உலகத்தில் தெரிகிறது. இன்று தெரியாத நபருடன் நாளை நீங்கள் இணையலாம். வாழ்க்கையின் தன்மை இப்படித்தான் இருக்கும். சில விஷயங்கள் நினைத்தபடி நடக்காது. எனில், நீங்கள் அடுத்தக் கட்டத்துக்கு நகரவேண்டும்.  

அதற்குப் பிறகு நான் நான்கு பேருடன் டேட்டிங் வைத்துக்கொண்டேன். யாரும் அதைப் பற்றிப் பேசவில்லை. பரபரப்பான செய்தி என்பதால் தோனி பற்றி எழுதுகிறார்கள்.

நான் தோனியை டேட்டிங் செய்தேனா இல்லையா என்பது இங்கு முக்கியமில்லை. ஆனால் மக்கள் நான் அவரைத் திருமணம் செய்யப்போவதாக உடனடியாக எண்ணிக்கொண்டார்கள். அது நிச்சயம் உண்மையல்ல. இதுபோன்ற செய்திகள் எங்களைத் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கின. எனவே தான் நான் ஊடகங்களுடன் இதுபற்றி அதிகம் பேசுவதில்லை. இப்போது கொஞ்சம் பேசுகிறேன். தோனியைப் பற்றி விரிவாக நான் பேசவிரும்பவில்லை. ஏனெனில் அவரை நான் மிகவும் மதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.