நடிகை அஞ்சலி பாட்டீல், ரஜினியுடன் இணைந்து காலா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அஞ்சலி நடித்துள்ள ஹிந்திப் படமான நியூட்டன் ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கபாலிக்குப் பிறகு பா.இரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினி, ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான பிரிவில் இந்தியாவின் சார்பாக 'நியூட்டன்' (Newton) என்கிற ஹிந்திப் படம் தேர்வாகியுள்ளது. 'நியூட்டன்' படத்தை அமித் மசுர்கர் இயக்கியுள்ளார். ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபதி, அஞ்சலி பாட்டீல் போன்றோர் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் அஞ்சலி பாட்டீலின் படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், காலா படக்குழுவினர் அஞ்சலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னை - போடி விரைவு ரயில் மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் இயக்கம்!

தில்லி கேபிடல்ஸின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து கெவின் பீட்டர்சன் விலகல்!
பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசு

கரூரில் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 18 மாணவர்கள் காயம்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

