கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிறந்தநாள் கொண்டாட்டம்: நயன்தாராவின் நியூயார்க் படங்கள்!

நியூயார்க்கில் எடுக்கப்பட்ட நயன்தாராவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன....

News image
Updated On :23 செப்டம்பர் 2017, 10:26 am

எழில்

இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு அவருடன் நியூயார்க் சென்றுள்ளார் நயன்தாரா. அங்கு எடுக்கப்பட்ட படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக 'நானும் ரவுடிதான்' என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இதனையடுத்து, நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் ஒன்றாக நியூயார்க் சென்றுள்ளார்கள். விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக. 

இருவரும் அவரவர் படப்பிடிப்புப் பரபரப்புகளில் இருந்து சற்று விலகி, எவ்விதத் தொந்தரவுமின்றிப் பிறந்தநாளைக் கொண்டாட நியூயார்க் சென்றுள்ளார்கள். 

இதையடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடனான பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுக் கூறியதாவது: 

இதுபோன்று ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுவேன் எனக் கனவிலும் நினைத்தது இல்லை. முதலில் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். என் வாழ்க்கையை மிகவும் அழகாக்கி வெளிச்சமாகியுள்ள நயன்தாராவுக்கும் நன்றி என்றார்.

இந்நிலையில் நியூயார்க்கில் எடுக்கப்பட்ட நயன்தாராவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.