பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மக்களுக்கு மாற்றத்தைக் கொடுக்கும் தலைவராக கமல் வந்தால் ஏற்றுக் கொள்வோம்: நடிகர் பிரசன்னா

மக்களுக்கு மாற்றத்தைக் கொடுக்கும் தலைவராக திருமுருகன் காந்தி வந்தாலும், கமல்ஹாசன் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று நடிகர் பிரசன்னா கூறினார்.

News image
Updated On :24 செப்டம்பர் 2017, 7:06 pm

DIN

மக்களுக்கு மாற்றத்தைக் கொடுக்கும் தலைவராக திருமுருகன் காந்தி வந்தாலும், கமல்ஹாசன் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று நடிகர் பிரசன்னா கூறினார்.
நடிகர் விஷால், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ள துப்பறிவாளன் படம் சேலத்தில் திரையிடப்பட்டுள்ளது. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடிகர் பிரசன்னா, இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். அப்போது, நடிகர் பிரசன்னா செய்தியாளர்களிடம் கூறியது: திருட்டு வி.சி.டி.யைத் தடுக்க திரைத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காவல் துறை முழுமையாக மனது வைத்தால் திருட்டு வி.சி.டி. முற்றிலுமாகத் தடுக்கப்படும். 
திரையரங்குகள் முழுமையாக கணினி மயமாக்கப்படும் போது சரியான கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல, திரையரங்குகளில் தின்பண்டங்களின் விலை அதிகமாக விற்பதைத் தடுக்க, சரியான விலையில்தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று சட்ட உத்தரவு வந்தாலே மாற்றம் ஏற்படும்.
மக்கள் தற்போது மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இந்த மாற்றத்தை ஏற்படுத்த திருமுருகன்காந்தி போன்றோரோ அல்லது கமல்ஹாசன் போன்றோரோ வந்தால், அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளோம் என்றார்.
இதையடுத்து, இயக்குநர் மிஷ்கின் செய்தியாளர்களிடம் கூறியது: துப்பறிவாளன் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் ஒவ்வொரு வருடமும் விஷாலை வைத்தே எடுக்கப்படும். எனக்கு வேலை உள்ளதால், அரசியலில் தலையிடுவதில்லை. அரசியல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நல்ல கருத்துகளை மக்களுக்குத் தெரிவிக்கும் படங்களை எடுப்பதே நோக்கம் என்பதால், அதில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.