Enable Javscript for better performance
actor s.vee.sekar's coment about bigg boss| பிக் பாஸ் குறித்து எஸ்வி சேகர்!- Dinamani

சுடச்சுட

  

  பத்து ரூபாய் கொடுத்தா லட்ச ரூபாய்க்கு நடிக்கிற பொண்ணு தான் ஜூலி: பிக் பாஸ் குறித்து எஸ்வி சேகர்!

  By சரோஜினி  |   Published on : 26th July 2017 06:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  big_boss_s_vee_sekar

   

  விஜய் டிவி யின் பிக்பாஸ் குறித்து தமிழகத்தில் கருத்து சொல்லாத, அல்லது கருத்து கேட்கப் படாத பிரபலங்கள் குறைவு. சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் எஸ்.வி சேகரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கேள்வி கேட்கப் பட்டது. அப்போது அவரளித்த பதில்;

  பிக் பாஸ் ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? அதை ஒரு எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியாகப் பார்க்க வேண்டுமே தவிர மக்கள் அதில் ஒரேயடியாக ஒன்றிப் போய் அங்கிருப்பவர்களின் செயல்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு அதைப் பற்றி பேசக் கூடாது. என்னைப் பொறுத்தவரை பிக்பாஸ்... டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவெல்லாம் அவர் வருவாரா? என மக்களை யோசிக்க வைத்த கமல் ஹாசன் முதன்முறையாக ஒரு டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் என்பதற்காக பிக் பாஸ் பார்க்கத் தொடங்கினேன். அந்நிகழ்ச்சியிலும் கூட கமல் தான் ஒரு மக்கள் பிரதிநிதியாகத் தான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாகக் கூறுகிறார். அவர் தன்னுடைய அனுபவங்களைக் கொண்டு பிக் பாஸில் கலந்து கொண்டவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குகிறார்.

  எனக்கு இதில் பிடிக்காத ஒரே விஷயம் எதுவென்றால்; ‘பரணியை பொறுக்கி’ என்று அந்த நிகழ்ச்சியிலுள்ள பெண் பங்கேற்பாளர்கள் புகார் கூறும் போது என்னால் அத்தகைய காட்சியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பரணியை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் அப்படிப்பட்டவர் அல்ல! அவர் புதிதாக நடிக்க வந்திருக்கும் ஒரு கலைஞன். அவருக்கென ஒரு குடும்பம் இருக்கிறது. மனைவி இருக்கிறார், குழந்தை இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இம்மாதிரியான சித்தரிப்புகளால் அவரது குடும்பத்திலுள்ளவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? இது போன்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு நடிகரோ, நடிகையோ அசிங்கப்படுத்தப் படும் போது அல்லது அச்சுறுத்தப்படும் போது அதை டி.வியில் பார்த்துக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் மாதிரி ஏதாவது வந்து விட்டால் அதற்கு யார் பொறுப்பெடுத்துக் கொள்வார்கள்? சம்மந்தப்பட்ட அந்த டி.வி நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொள்ளுமா? அல்லது கையெழுத்துப் போட்டு போட்டிக்காக அங்கே நுழைந்தார்களே அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்களா?

  நானும் டி.வி நிகழ்ச்சிகளில் நடுவராகக் கலந்து கொண்டிருக்கிறேன்... அவர்கள் யார் வெல்ல வேண்டும் எனத் தீர்மானித்து விட்டால் அதற்கேற்ப காட்சிகளை அமைத்து நிகழ்ச்சியைக் கொண்டு செல்வார்கள் என்பது வாஸ்தவம் தான். இப்போது பிக் பாஸ் வீட்டிலிருப்பவர்களின் நடத்தையை வைத்துப் பார்க்கும் போது ஓவியா இந்தப் போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் அந்தப் பெண் வாழ்க்கையை மிக எளிதாக எடுத்துக் கொள்கிறார். அவரை பிறர், முகத்துக்கு எதிராகத் திட்டும் போது கூட புன்னகையுடன் தோளைக் குலுக்கிக் கொண்டு சென்று விடுகிறார். அவருக்கு அம்மா இல்லையென்று கேள்விப்பட்டேன்.. அதைப் பற்றி சரியாக எனக்குத் தெரியவில்லை. அவர் அழும் போது கூட எல்லோர் முன்னிலும் அழுவதில்லை. தனியாகச் சென்று தான் அழுகிறார். பிறரைப் போல வயிற்றைப் பிடித்துக் கொண்டு அனைவர் முன்பும் ஐயோ.. அம்மா என்று அழுது டிராமாவெல்லாம் செய்யவில்லை.

  10 ரூபாய் கொடுத்தால் லட்ச ரூபாய்க்கு நடிக்கும் பெண் தான் அந்த ஜூலி. சாதரணமாக ஃபிளாட்டாகத் தான் கீழே விழுந்தார் அந்தப் பெண்... அதற்குப் பிறகு கபடி விளையாட்டில் எல்லாம் கலந்து கொண்டு வந்த பிறகு... தான் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை என்று அவருக்குத் தோன்றி விட்டது. அதனால் திடீரென்று நினைத்துக் கொண்டு அத்தனை டிராமா செய்கிறார். அது ஒருவிதமான மனநோய். அதாவது யாருமே கவனிக்கவில்லை என்றால் சாமி வந்தாற் போல் சிலர் ஆடுவார்கள் தெரியுமா? அது அவர்களுக்கே தெரியாது.. ஒரு அறை விட்டால்... ஆ... அப்படியா செய்தேன் என்பார்களே! அதைப் போல அங்கே அறை விட ஆட்கள் யாரும் இல்லையென்பதால் அது ஒரு டிராமாவாகி விட்டது. அவ்வளவு தான். அதைத்தவிர அதில் சொல்ல எதுவுமில்லை.
   

  source & Image courtsy: india glitz

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai