
பாகுபலி 1&2 திரைப்படங்களில் நீண்ட கேசத்துடனும், தாடியுடனும் பிரபாஸை கண்டுகளித்த அவரது ரசிகர்களுக்கு, அடுத்த ஆச்சர்யம் தயார். அது பிரபாஸின் கிளீன் ஷேவ் லுக். கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்க டூரில் இருந்த பிரபாஸ் தற்போது இந்தியா திரும்பியுள்ள நிலையில் விமானத்தில் வைத்து எடுக்கப் பட்டுள்ள அவரது இந்த புதிய புகைப்படத் தோற்றம் இணையத்தில் பலமுறை பகிரப்பட்டு வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை இது பிரபாஸின் புதிய திரைப்படமான சாஹூவிற்கான தோற்றமாக இருக்கலாம். அல்லது பாகுபலியில் நீண்ட தலைமுடி, தாடியுடன் நடித்த அலுப்பில் இம்மாதிரியான கிளீன் ஷேவ் தோற்றத்துக்கு அவர் மாறி இருக்கலாம்.
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் பிரபாஸின் அடுத்த படமான சாஹூவை சுஜீத் இயக்குகிறார். இசை ஷங்கர் ஈசன் லாய், கலை மற்றும் புரடக்ஸன் டிஸைன் சாபு சிரில். இப்படத்தின் நாயகி யார்? என இன்னும் அறிவிக்கப் படவில்லை. காலா படத்தின் ஹியூமா குரேஸி, காத்ரீன கைஃப், காஜல் அகர்வால், மீண்டும் அனுஷ்கா எனச் சிலரது பெயர் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


வங்கியில் வேலை வேண்டுமா..? பேங்க் ஆஃப் பரோடாவில் 1,100 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

1965 இந்தியா - பாக். போர் நாயகன் ஏ.டி. குக் காலமானார்! விமானப் படை இரங்கல்!






