மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பாகுபலி 3-ம் பாகத்துக்கு வாய்ப்பே இல்லை: இயக்குநர் ராஜமெளலி

பாகுபலி படம் தென்னிந்தியாவில் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்த்தோம். ஆனால்...

News image
Updated On :2 அக்டோபர் 2017, 9:42 am

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. 

ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. இந்தியத் திரையுலகில் வேறெந்தப் படமும் இத்தகைய சாதனையைச் செய்ததில்லை. வெளியான அனைத்து மொழிகளிலும் பல கோடி வசூலை அள்ளியது. 

பாகுபலி படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமெளலி, பாகுபலி படம் குறித்துக் கூறியதாவது: 

பாகுபலி படத்தின் முழுக்கதையையும் இரண்டு பாகங்களில் முடித்துவிட்டோம். அடுத்தப் பாகம் எடுத்தால் அது நியாயமாக இருக்காது. பாகுபலி படம் தென்னிந்தியாவில் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்த்தோம். ஆனால், வடக்கிலும் சூப்பர் ஹிட் ஆகும் என நினைக்கவேயில்லை.

என்னுடைய அடுத்தப் படம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.