முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் 'லைஃப் ஆப் ஃபார்மர் இந்தியன் பிரைம் மினிஸ்டர் டாக்டர் மன்மோகன் சிங்' (Life of former Indian prime minister Dr Manmohan Singh). இது வெளிவந்த சமயத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில் இந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து பாலிவுட்டில் 'தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற பெயரில் ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய் குட்டே இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல நடிகர் அனுபம் கேர் மன்மோகன் சிங் வேடத்தில் நடிக்கிறார்.

'தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' படத்தில் சோனியா காந்தியாக நடிகை சுஸன்னா பெர்னெர்ட் (35) என்பவர் நடித்துள்ளார். இவர் ஜெர்மன் நடிகையாவார். இதற்கு முன் சில திரைப்படங்கள் மற்றும் இந்திய சீரியல்களில் நடித்துள்ளார். சோனியா காந்தியாக நடிப்பதில் பெருமை என்று கூறும் சுஸன்னாவுக்கு ஹிந்தி, பெங்காலி, மராத்தி, ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட பல மொழிகளில் சரளமாக பேசத் தெரியும்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. டிசம்பர் 21-ம் தேதி இப்படம் வெளியாகும் என்கிறது பாலிவுட் வட்டாரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.யில் தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் வன்முறை
சட்டப்பேரவைத் தேர்தல்! டாஸ்மாக் கடைகளுக்கு எத்தனை நாள்கள் விடுமுறை?

”பாட்ட அமத்துங்க!” பிரசாரத்திற்கு நடுவே நுழைந்த தவெக ஆட்டோவை கண்டித்த திலகபாமா!
விரைவில் வெளியாகும் ஏழுகடல் ஏழுமலை!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


