6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமேஸான் பிரைமில் வெளியாகவுள்ள ஏ.ஆர். ரஹ்மான் தொடர்!

எந்தப் புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது ஏ.ஆர். ரஹ்மானின் வழக்கம்...

News image
Updated On :10 ஆகஸ்ட் 2018, 9:33 am

எழில்

எந்தப் புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது ஏ.ஆர். ரஹ்மானின் வழக்கம்.

இதன் அடுத்தக்கட்டமாக சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் இணையத் தொடரில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

அமேஸான் பிரைம் தளத்தில் ஏ.ஆர். ரஹ்மான் பங்குபெறும் புதிய தொடர், ஆகஸ்ட் 15 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

ஹார்மனி வித் ஏ.ஆர். ரஹ்மான் (Harmony with AR Rahman) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரில், இந்தியா முழுக்கப் பயணித்து புதிய இசைத் திறமைகளையும் இசைக்கருவிகளையும் குறித்துப் பேசவுள்ளார் ரஹ்மான். வட இந்தியப் பகுதிகளில் சென்று அங்குள்ள இசைக்கலைஞர்களுடன் ரஹ்மான் உரையாடுவது இந்தத் தொடரின் முக்கிய அம்சமாக இருக்கவுள்ளது. 

வீடியோ ஸ்ட்ரீமிங் மூலமாகப் படங்கள் மற்றும் இதுபோன்ற தொடர்களைப் பார்க்க வசதியை ஏற்படுத்தித் தருகிறது அமேஸான் பிரைம் செயலி. இதற்கென தனிக்கட்டணங்கள் உண்டு. டெஸ்க்டாப் கணினி, ஸ்மார்ட்போன், டேப்ளெட் பிசி போன்றவற்றைப் பயன்படுத்தி அமேஸான் பிரைம் விடியோக்களைக் காணமுடியும். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.