மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ள மலையாள நடிகை! (படங்கள்)

ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் படத்தில் மாளவிகா நடிப்பது குறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என்று...

News image
Updated On :17 ஆகஸ்ட் 2018, 5:43 am

எழில்

2013-ல் பட்டம் போலே என்கிற மலையாளப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் மாளவிகா மோஹனன். ஒளிப்பதிவாளர் மோஹனனின் மகள். இதன்பிறகு புகழ்பெற்ற ஈரான் இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய ஹிந்திப் படமான பியாண்ட் தி கிளவுட்ஸில் நடித்து அதிகக் கவனம் பெற்றார். 

மாளவிகா அடுத்ததாக ரஜினி படத்தில் நடிக்கவுள்ளார் என்பதுதான் இவரைப் பற்றிய அடுத்தப் பரபரப்புச் செய்தியாக உள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார்கள்.

இந்தக் கூட்டணியில் மாளவிகா மோஹனனும் இணைந்துள்ளார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. சிம்ரன் இந்தப் படத்தில் இடம்பெற்றாலும் ரஜினியின் ஜோடியாக நடிப்பது மாளவிகா தான் என அறியப்படுகிறது.

ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் படத்தில் மாளவிகா நடிப்பது குறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.