புது தில்லி: கேரளா வெள்ளத்துக்கு நீங்கள் உதவி செய்யவில்லையா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பிரபல நடிகை காஜல் அகர்வாலின் பதில் சமூக வலைதளங்களில் புகழ்பெற்றுள்ளது.
"கடவுளின் தேசம்" என்று அழைக்கப்பட்ட கேரள மாநிலம், தற்போது வரலாறு காணாத மழை வெள்ளத்தால் அவதிப்பட்டு வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் பெய்யாத மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஏறக்குறைய ரூ. 20 ஆயிரம் கோடியளவுக்கு இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300-ஐ தாண்டி விட்டது. இதைத்தொடர்ந்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களும் , அமைப்புகளும் மற்றும் தனி நபர்களும் கேரளாவுக்கு நிதி உதவி அளித்து வருகின்றன.
இந்நிலையில் கேரளா வெள்ளத்துக்கு நீங்கள் உதவி செய்யவில்லையா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பிரபல நடிகை காஜல் அகர்வாலின் பதில் சமூக வலைதளங்களில் புகழ்பெற்றுள்ளது.
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் நடிகை காஜல் அகர்வாலிடம் ரசிகர் ஒருவர், ‘கேரளா வெள்ளத்துக்காக நீங்கள் எதுவும் பண உதவி செய்யவில்லையே?’ என்று கிண்டல் தொனியில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு காஜல், ‘‘நான் என் கடமையை செய்துவிட்டேன். அதை உங்களிடம் கண்டிப்பாக நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் உதவிக்கு நன்றி’என்று காரமாக பதில் கொடுத்தார்.
அவரது இந்த பதில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பகிரப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |

த.வெ.க.வை ஆதரித்துக் கையெழுத்திட்ட அமமுக எம்எல்ஏ! டிடிவி சொல்வது உண்மையா?

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நியமனம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

