25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் '96' திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு 

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் '96' திரைப்பட ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:35 pm

DIN

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் '96' திரைப்பட ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

மெட்ராஸ் என்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் '96'. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கின்றனர். ஆக்ஷன் கலந்த காமெடி படமான இதில் காளி வெங்கட் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சி.பிரேம் குமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். 1996ஆம் வருடத்தில் நடைபெறும் சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின்  படப்பிடிப்பு அந்தமான், கொல்கத்தா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.

படத்தின் பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில் '96' திரைப்பட ட்ரெய்லர் வெள்ளியன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.  

ட்ரெய்லர்:

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.