சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் '96' திரைப்பட ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
மெட்ராஸ் என்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் '96'. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கின்றனர். ஆக்ஷன் கலந்த காமெடி படமான இதில் காளி வெங்கட் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சி.பிரேம் குமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். 1996ஆம் வருடத்தில் நடைபெறும் சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அந்தமான், கொல்கத்தா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.
படத்தின் பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில் '96' திரைப்பட ட்ரெய்லர் வெள்ளியன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லர்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!

56 மணி நேர பேட்டரி திறனுடன் ரியல்மி பட்ஸ் டி500 புரோ!

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த இளம் பஞ்சாப் வீரர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


