பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

நயன்தாரா நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்தை வெளியிட அனுமதி!

ரூ. 4 கோடியைப் பெற்றுக்கொண்ட பிறகு இமைக்கா நொடிகள் படத்துக்கான விநியோக உரிமையைத் தரவில்லை என்று...

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

இமைக்கா நொடிகள் படத்தை நிபந்தனைகளுடன் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். சிறிய வேடத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். இசை - ஹிப் ஹாப் தமிழா. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தை கேமியோ பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இப்படத்தின் முதல் இரு காட்சிகள் தொடங்கவில்லை. நீதிமன்றத்தில் இப்படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதால் திரையரங்குகளுக்கு கேடிஎம் அனுப்படவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பகுதிகளிலும் இப்பிரச்னை காரணமாகப் படம் வெளியாகவில்லை. இதனால் படத்தின் முதல் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். 

ரூ. 4 கோடியைப் பெற்றுக்கொண்ட பிறகு இமைக்கா நொடிகள் படத்துக்கான விநியோக உரிமையைத் தரவில்லை என்று ஸ்ரீகிரீன் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது ஆர்.வி. மீடியா நிறுவனம். இதனால் இப்படத்தை வெளியிடத் தடைகோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, இமைக்கா நொடிகள் படத்தை நிபந்தனைகளுடன் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. படம் வெளியான பிறகு வரும் முதல் ரூ. 4 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தவேண்டும். ரூ  4 கோடிக்குப் பிறகு வரும் வருமானத்தை ஸ்ரீ கிரீன் நிறுவனம் எடுத்துக்கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு உள்பட உலகமெங்கும் இமைக்கா நொடிகள் படம் வெளியாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.