பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

அஜித் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் ரங்கராஜ் பாண்டே!

தந்தி டிவியிலிருந்து சமீபத்தில் விலகியுள்ள பிரபல அரசியல் விமரிசகர் ரங்கராஜ் பாண்டே திரைத்துறையில் நுழைந்துள்ளார்... 

News image
Updated On :20 டிசம்பர் 2018, 8:47 am

எழில்

தந்தி டிவியிலிருந்து சமீபத்தில் விலகியுள்ள பிரபல அரசியல் விமரிசகர் ரங்கராஜ் பாண்டே திரைத்துறையில் நுழைந்துள்ளார். 

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குகிறார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகவுள்ளது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார். கடந்த வாரம் இப்படம் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் ரங்கராஜ் பாண்டே. பிங்க் படத்தில் பியூஷ் மிஷ்ரா நடித்த வேடத்தில் ரங்கராஜ் பாண்டே நடிப்பார் என்று கூறப்படுகிறது. கடந்த வாரம்  நடைபெற்ற இப்படத்தின் பூஜை விழாவிலும் ரங்கராஜ் பாண்டே கலந்துகொண்டார். இப்படத்தில் தான் நடிப்பதை ட்விட்டரிலும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.