சென்னை: சில மாதங்களுக்கு முன் இணையத்தில் சர்ச்சையான விவாதங்களைக் கிளப்பிய 'லட்சுமி’ குறும்படத்தினை இயக்கிய இயக்குநரின் முதல் திரைப்படத்தில் நடிகை நயன்தார நடிக்க இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன் 'லட்சுமி’ என்ற குறும்படம் இணையத்தில் வெளியானது. அதில் கூறப்பட்டிருந்த கதைக்காக இணையத்தில் பெரும் சர்ச்சையான விவாதங்களைக் கிளப்பியது. ஒரு பக்கம் ஆதரவும் மற்றொரு பக்கம் எதிர்ப்பும் என இரு தரப்பாக அதனைப் பற்றிய விவாதங்கள் எழுந்தது.
இந்த குறும்படத்தை சர்ஜுன் என்பவர் இயக்கி இருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இவருடைய இயக்கத்தில் ‘மா’ என்ற புதிய குறும்படம் ஒன்று வெளியானது. வளர் இளம் பருவ பெண் எதிர்கொள்ளும் கர்ப்பம் ஒன்றிணைப் பற்றிய இந்த குறும்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
தற்பொழுது இயக்குநர் சர்ஜுன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இது உருவாக உள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


