ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நடிகை திவ்யா உன்னி மறுமணம் செய்தார்!

மும்பையைச் சேர்ந்த கேரள இளைஞரும் சாஃப்ட்வேர் என்ஜினியருமான அருண் குமார் மணிகண்டனை...

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 9:17 am

எழில்

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள நடிகை திவ்யா உன்னி மறுமணம் செய்துள்ளார். 

மும்பையைச் சேர்ந்த கேரள இளைஞரும் சாஃப்ட்வேர் என்ஜினியருமான அருண் குமார் மணிகண்டனை, அமெரிக்காவின் ஹுஸ்டனில் திருமணம் செய்துகொண்டார் திவ்யா உன்னி. அருண் குமார், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். நான்கு வருடங்களாக ஹுஸ்டனில் வசித்து வருகிறார். 

2002-ல் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் சுதிர் சேகரனைத் திருமணம் செய்தார் திவ்யா உன்னி. இவர்களுக்கு அர்ஜூன், மீனாட்சி என இரு குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் 2016-ம் ஆண்டு சுதிர் சேகரனை திவ்யா விவாகரத்து செய்தார். இதையடுத்து தற்போது நடனக் கலைஞராக உள்ள திவ்யா உன்னி, மறுமணம் செய்துள்ளார். இத்தகவலை அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 2013-க்குப் பிறகு திவ்யா உன்னி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.