தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சர்ச்சைக்குரிய குறும்பட இயக்குநர் இயக்கப் போகும் படத்தில் நயன்தாரா! 

சில மாதங்களுக்கு முன் இணையத்தில் சர்ச்சையான விவாதங்களைக் கிளப்பிய 'லட்சுமி’ குறும்படத்தினை இயக்கிய இயக்குநரின் முதல் திரைப்படத்தில் நடிகை நயன்தார நடிக்க இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 4:02 pm

சென்னை: சில மாதங்களுக்கு முன் இணையத்தில் சர்ச்சையான விவாதங்களைக் கிளப்பிய 'லட்சுமி’ குறும்படத்தினை இயக்கிய இயக்குநரின் முதல் திரைப்படத்தில் நடிகை நயன்தார நடிக்க இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 

சில மாதங்களுக்கு முன் 'லட்சுமி’ என்ற குறும்படம் இணையத்தில் வெளியானது. அதில் கூறப்பட்டிருந்த கதைக்காக இணையத்தில் பெரும் சர்ச்சையான விவாதங்களைக் கிளப்பியது.  ஒரு பக்கம் ஆதரவும் மற்றொரு பக்கம் எதிர்ப்பும் என இரு தரப்பாக அதனைப் பற்றிய விவாதங்கள் எழுந்தது.

இந்த குறும்படத்தை சர்ஜுன் என்பவர் இயக்கி இருந்தார்.  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இவருடைய இயக்கத்தில் ‘மா’ என்ற புதிய குறும்படம்  ஒன்று வெளியானது. வளர் இளம் பருவ பெண் எதிர்கொள்ளும் கர்ப்பம் ஒன்றிணைப் பற்றிய இந்த குறும்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தற்பொழுது இயக்குநர் சர்ஜுன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.  கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இது உருவாக உள்ளதாகத் தெரிகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.