/

டிடி இப்படிச் செய்யலாமா எனக் கேள்வி கேட்ட ரசிகர்கள்!

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி. சின்னத் திரை ரசிர்களின் பிரியத்துக்குரிய

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 12:25 pm

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி. சின்னத் திரை ரசிர்களின் பிரியத்துக்குரிய விஜே என்றால் அன்றும் இன்றும் அது டிடியாகத் தான் இருக்கும். டிடியின் திருமணத்தை ஒளிபரப்பும் அளவிற்கு சானல் அவருக்கு அங்கீகாரம் கொடுத்திருந்தது. 

இந்நிலையில் அண்மையில் வெறொரு தொலைக்காட்சி சானல் நடத்திய நிகழ்ச்சியொன்றின் சிறப்பு விருந்தினராக டிடி கலந்து கொண்டார். இத்தகவல் சானல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. டிடி புதிய சானலுக்கு மாறிவிடுவாரோ என்று ரசிகர்கள் ஊகம் செய்தனர்.

Story image

ஆனால் இவற்றுக்கு மாறாக டிடி அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் காரணம் அது இளையமைப்பாளர் இளையராஜாவை போற்றும் நிகழ்வென்பதால் அதில் விருப்பத்துடன் பங்கேற்றுள்ளார் டிடி. மற்றபடி பணி மாற்றம் போன்ற எண்ணம் எதுவுமில்லை என்று டிடி தரப்பு மறுத்துள்ளது. மாற்றம் ஒன்றே மாறாத விதியெனில் சில மாற்றங்கள் ஏமாற்றங்களாகிவிடுவதும் அதே விதிதான்.

Story image

தன்னுடைய ஆஸ்தான சானலில் டிடி தொடர்ந்து நீடித்திருப்பதே அவரின் விருப்பமாக இருக்கும். ரசிகர்களைப் பொருத்தவரை டிடி எந்த சானலில் தோன்றினாலும் நிச்சயம் அவருக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள் என்பது உறுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.