தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார்: மேலும் ஒருவர் கைது! 

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலா பால் அளித்த புகாரில் மேலும் ஒருவரை போலீசார் திங்களன்று கைது செய்தனர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 2:02 pm

DIN

சென்னை: தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலா பால் அளித்த புகாரில் மேலும் ஒருவரை போலீசார் திங்களன்று கைது செய்தனர்.

மலேசிய கலை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்னை தி.நகரில் நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்த தன்னிடம், தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்தாக நடிகை அமலா பால் சில தினங்களுக்கு முன்னர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரில் நடனப்பள்ளி உரிமையாளரும் , தொழிலதிபருமான அழகேசன் என்பவர் மலேசியாவில் இருக்கும் தமது நண்பருடன் டின்னர் சாப்பிட செல்ல வேண்டும் என அழைத்ததாக அமலா பால் புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரையடுத்து சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவரை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகை அமலாபாலுக்கு தொல்லை கொடுத்ததாக  கூறப்பட்ட  புகாரில் போலீசார் மேலும் ஒருவரை கைது செய்தனர். அவர் குறிப்பிட்ட மலேசிய கலைநிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்த நிறுவனதின் ஊழியரான பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர் என்று தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய வினோத் என்பவரை போலீசார் வலைவீசித் தேடிவருவதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.